ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் கணினியியல் பயிலரங்கம்

ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் கணினியியல் துறை மாணவியர் சங்கம் சார்பில் தேசிய அளவிலான பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை "டெக்சா-18' என்ற பெயரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் கணினியியல் துறை மாணவியர் சங்கம் சார்பில் தேசிய அளவிலான பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை "டெக்சா-18' என்ற பெயரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பயிலரங்கத்துக்கு கல்லூரி முதல்வர் கோ.கீதா தலைமை வகித்தார். ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் ஏ.சண்முகராஜேஸ்வரன், தலைவர் எம்.வீரபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணினியியல் துறையின் தலைவர் பே.ரவி வரவேற்று பேசினார்.ஜி.கே.இன்போடெக் திட்ட மேலாளர் எஸ்.கணேசன் பயிலரங்கத்தை நடத்தினார்.ராமநாதபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி எம்.பிரீத்தா மகளிரின் உரிமைகளைப் பற்றிப் பேசியதுடன் அழகப்பா பல்கலைக்கழக அளவில் கணினியியலில் முதல் இடம் பிடித்த மாணவி ஹசீனா பானுவுக்கு நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டினார். சங்கப் பொருளாளர் இ.பிரீத்தி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com