காவிரி திட்ட குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் பொதுமக்கள்

கமுதியில்  குழாய் சேதமடைந்து காவிரி கூட்டுக்குடிநீர் வீணாகி வருவதால், பொதுமக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கமுதியில்  குழாய் சேதமடைந்து காவிரி கூட்டுக்குடிநீர் வீணாகி வருவதால், பொதுமக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதுகுளத்தூர் அருகே கீழக்காஞ்சிரங்குளம் நீரேற்றும் நிலையத்திலிருந்து, கமுதியை சுற்றியுள்ள 300-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு  காவிரி கூட்டுக் குடிநீர்  திட்டத்தில் இருந்து தண்ணீர் விநியோகம்  செய்யபடுகிறது. கீழக்காஞ்சிரங்குளத்திலிருந்து பேரையூர், கமுதி வழியாக சாலையோரங்களில் ராட்சத குழாய்கள் வழியாக காவிரி கூட்டுக் குடிநீர் செல்கிறது. 
இந்நிலையில் கமுதி கோட்டைமேட்டில் குண்டாத்திவீரன் கோயில் எதிரே, மதுரை சாலையில் குழாய்கள்  சேதமடைந்து குடிநீர் வெளியேறி சாலைகளில் தேங்குகிறது. 
இதனால் கிராமப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சாலையில் தண்ணீர் தேங்குவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். 
போதுமான குடிநீர் விநியோகம் இல்லாததால், இப்பகுதி மக்கள் தனியாரிடம் இருந்து தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். 
எனவே சேதமடைந்த காவிரி குடிநீர் குழாய்களை சீரமைக்க  குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com