பூம்புகார் அழிவைப் பற்றி ஆராய அழகப்பா பல்கலை. திட்டம்

பூம்புகார் அழிவைப் பற்றிய ஆராய்ச்சி மேற்கொளள்ள காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

பூம்புகார் அழிவைப் பற்றிய ஆராய்ச்சி மேற்கொளள்ள காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான கருத்தரங்கம் பல்கலைக்கழகத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் 30-க்கும் மேற்பட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களையும் மற்றும் ஆராய்ச்சி மையங்க ளையும் சேர்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கம் தொடக்க விழாவில் அழகப்பா பல்கலைக் கழகத்தின் தகுதிசார் பேராசிரியரும், காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தரும், பூம்புகார் ஆய்வுத்திட்டத்தின் தலைவருமான சோம. ராமசாமி விளக்க உரையாற்றினார்.
அவர் கூறுகையில், பூம்புகாரின் வரலாற்றை கணினிகள் மூலம் வடிவமைப்பதைப் பற்றிய இந்த ஆய்வுத்திட்டத்தில் தானியங்கி இயந்திரங்களால் கடல் கீழ் நில அளவீடு, கடலுக்குள் புகைப்படம் எடுத்தல் மற்றும் அவற்றிலிருந்து பூம்புகாரின் சிதையுண்ட பகுதிகளைக் கண்டறிதல், தமிழ் இலக்கியம், வரலாறு, கல்வெட்டுச்சான்றுகள், தொல்பொருள் சின்னங்கள் ஆகியவற்றின் மூலம் பூம்புகார் பற்றிய பல தகவல்களை வெளிக்கொணருதல் போன்றவை நடத்தப்படவுள்ளது.
எந்த காரணங்களால் பூம்புகார் அழிந்திருக்கக் கூடும் என்பது குறித்து ஆராயப்படும். இந்த ஆய்வில் கடந்தகால மனித இனத்தின் வளர்ச்சி மட்டுமின்றி எதிர் காலத்தில் பேரிடர் பற்றிய கணிப்புகளும் நடத்தமுடியும் என்றார்.
கருத்தரங்கை அழகப்பா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் குருமல்லேஷ் பிரபு துவக்கி வைத்துப்பேசினார். இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கழகத்தின் ஆலோசகர் கே.ஆர். முரளி மோகன் பாரம்பரிய சின்னங்களை பற்றி ஆராய்ந்து அவைகுறித்த உண்மைகளை வெளிகொணர்ந்து அவற்றைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார்.
கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பூம்புகாரைப்பற்றிய ஆய்வுத்திட்டங்களை சமர்ப்பித்தனர். அதைத்தொடர்ந்து விவாதங்கள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com