ஜல்லிக்கட்டு மாடுகளை பாதுகாக்க விரைவில் கால்நடை ஆராய்ச்சிப் பண்ணை: துணைவேந்தர்

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற புலிக்குளம் மாடுகளை பாதுகாக்கவும், கால்நடைகளின் வளர்ப்பு, பராமரிக்கும் முறை குறித்தும் பயிற்சி

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற புலிக்குளம் மாடுகளை பாதுகாக்கவும், கால்நடைகளின் வளர்ப்பு, பராமரிக்கும் முறை குறித்தும் பயிற்சி வழங்குவதற்காக சிவகங்கை மாவட்டத்தில்  கால்நடை ஆராய்ச்சி மையம்  விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் எஸ்.திலகர்  தெரிவித்தார்.
  இதுகுறித்து அவர் சிவகங்கையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: தென் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் கால்நடை வளர்ப்பு குறித்தும், பராமரிக்கும் முறைகள் குறித்தும் பயிற்சி அளிப்பதற்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் சார்பில் மானாமதுரை அருகே உள்ள மாங்குளம் கிராமத்தில் ரூ.2 கோடி மதிப்பில் கால்நடை ஆராய்ச்சி மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
      சுமார் 44 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த பண்ணையில் கால்நடைகள் வளர்ப்பு,  தீவன உற்பத்தி, பால் உள்ளிட்ட பொருள்களை மதிப்பு கூட்டுப் பொருள்களாக மாற்றும்  நிலையம் அமைக்கப்பட உள்ளது.
  ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற புலிக்குளம் மாடுகளை பாதுகாப்பதே இந்த  பண்ணையின் முக்கிய நோக்கமாகும்.இதன் ஒரு பகுதியாக புலிக்குளம் கன்றுக்களை அதிகளவில் உருவாக்கி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  ஓரிரு நாட்களில் பணிகளைத் தொடங்கி டிசம்பருக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
        இவைதவிர,சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடைகள் குறித்து ஆராய்ச்சி படிப்பினை மேற்கொண்டு வரும் மாணவர்கள், பேராசிரியர்கள், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர்களின் துணை கொண்டு பண்டைய கால தமிழனின் வாழ்வியலோடு புலிக்குளம் மாடுகளின் தொடர்புகள் குறஇத்து ஆய்வு செய்து, ஆவணப்படுத்தி அருங்காட்சியகமும்  அமைக்க உள்ளோம் என்றார்.
     கால்நடை உற்பத்தி கல்வி மையத்தின் இயக்குநர் ரமேஷ் சரவண குமார் உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com