தலைமையாசிரியர் நியமன முறையை மாற்றியமைக்க வலியுறுத்தல்

அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளிஸ் தலைமையாசிரியர் நியமன விதிமுறையை மாற்றியமைக்கவேண்டும் என்று தமிழ்நாடு

அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளிஸ் தலைமையாசிரியர் நியமன விதிமுறையை மாற்றியமைக்கவேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காரைக்குடியில் திங்கள் கிழமை தமிழ்நாடு தனியார் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலர் பொ.சுப்பிரமணியன் கூறியதாவது: பள்ளிக்கல்வியை சீரமைக்க 37 புதிய அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். ஆனால் அதில் சிறுபான்மையினரல்லாத அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் நியமனம் குறித்த விதிகள் மாற்றப்படவில்லை.
தமிழகம் முழுவதிலும் 1165 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன.
1974 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்காற்று விதிகளின்படி தகுதி மற்றும் திறமை அடிப்படையில் பள்ளி நிர்வாகம் தலைமையாசிரியரை நியமிக்க லாம். இதனால் பணிமூப்பு பின்னக்குத் தள்ளப்பட்டு பணம், ஜாதி மற்றும் மதம் போன்றவை முக்கியத்துவம் பெற்று தலைமையாசிரியரை நியமிக்கின்றனர். இதனால் பணியில் மூத்தோர் தகுதியும், திறமையும் இருந்து தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற முடிவதில்லை.
எனவே அரசு பள்ளிகளில் பணிமூப்பு அடிப்படையில் தலைமையாசிரியர் பதவிஉயர்வு இருப் பதைப்போன்று அரசு உதவிபெறும் பள்ளிகளில் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கிட பள்ளிக்கல்வித்துறை உரிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com