காரைக்குடி அழகப்பா கல்லூரியில் மே 29 இல் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை முதலா மாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மே 29 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை முதலா மாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மே 29 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
   இது குறித்து, கல்லூரி முதல்வர் கூ. கூடலிங்கம் தெரிவித்துள்ளதாவது: இக்கல்லூரியில் 2017-2018 கல்வியாண்டுக்கான பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.சி.ஏ., உள்ளிட்ட பாடப் பிரிவுக்கான மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மே 29-ஆம் தேதி தொடங்கி ஜூன் 3-ஆம் தேதி நிறைவடைகிறது.
   மே 29 காலை 9 மணிக்கு, அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் சிறப்புக் கலந்தாய்வு நடைபெறும். இதில், முன்னாள் படைவீரரின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடைபெறும்.
   மே 30 காலை 11 மணிக்கு, பி.ஏ. தமிழ், ஆங்கிலம் பாடப் பிரிவுகளுக்கும், மே 31 காலை 9 மணிக்கு 675-க்கு மேல் 800 வரை கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்ற கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவு மாணவ, மாணவியருக்கும், ஜூன் 1 இல் 601-க்கு மேல் 674 வரை கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்ற கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவு மாணவ, மாணவியருக்கும், ஜூன் 2-இல் 525-க்கு மேல் 600 வரை கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்ற கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவு மாணவ, மாணவியருக்கும், ஜூன் 3-இல் 525-க்கு கீழ் தேர்ச்சிபெற்ற கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் சேர விரும்பும் அனைவருக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
   கலந்தாய்வின்போது, மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் பயின்ற பாடங்கள் மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில், கலை பாடப் பிரிவான பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ., வரலாறு, பொருளாதாரம், அறிவியல் பாடப் பிரிவில் பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் புவி அமைப்பியல், கணினி அறிவியல், பி.சி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளில் இடம் இருக்கும்பட்சத்தில் விரும்பிய பாடப்பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம்.
   இக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை, தமிழக அரசின் சேர்க்கை விதிமுறைகளின்படியும், இடஒதுக்கீடு அடிப்படையிலும் நடைபெறும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com