நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டமானால் "நீட்' தேர்வை நடத்தலாம்: முன்னாள் அமைச்சர்

அகில இந்திய அளவில் ஒரே பாடத்திட்டத்தை கொண்டுவந்த பின்னர் "நீட்' தேர்வை நடத்தலாம் என்று தமிழக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.

அகில இந்திய அளவில் ஒரே பாடத்திட்டத்தை கொண்டுவந்த பின்னர் "நீட்' தேர்வை நடத்தலாம் என்று தமிழக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட திமுக சார்பில் ஹிந்தி எதிர்ப்பு மற்றும் நீட் தேர்வு குறித்து காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
நீட் தேர்வு என்பது மாநிலத்தில் ஹிந்தியை திணிப்பதற்கான மறைமுக வழியாகும். அந்தத் தேர்வுக்கான கேள்விகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து தான் கேட்கப்படுகிறது. நீட் தேர்வு கொண்டுவரும் முன்பு இந்திய அளவில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
சமமாக இல்லாத மாணவர்களிடையே நீட் தேர்வு நடத்தி அதில் தேர்ச்சிபெறும் மாணவருக்கே இடம் என்று சொன்னால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அதனால் தான் மாணவர்கள் மீது அக்கறை கொண்டு நீட் தேர்வு கொண்டுவரக் கூடாது என்று மாநிலம் முழுவதும் திமுக கருத்தரங்குகள் நடத்தி வருகிறது. ஆனால் தமிழக ஆட்சியாளர்களுக்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்வது மட்டும்தான் தெரியும்.
நீட் தேர்வு குறித்து பேசினால் பிரதமர் கோபித்துக் கொள்வார் என்ற பயத்திலும் கூட அவர்கள் பேசாமல் இருக்கலாம் என்றார்.
கருத்தரங்கில் கலந்துகொண்ட இளைஞர்கள் ,மாணவர்களின் கேள்விகளுக்கு பொன்முடி பதிலளித்துப் பேசினார். முன்னதாக முன்னாள் அமைச்சர் கேஆர். பெரிய கருப்பன் வரவேற்றுப் பேசினார். முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன், முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் உள்ளிட்டோர் பேசினர்.
கருத்தரங்கில் முன்னாள் எம்.எல்.ஏ சுப. துரைராஜ், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி. திராவிடமணி, நகர்மன்ற முன்னாள் தலைவர் சே. முத்துத்துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com