தேவகோட்டையில் தோட்டக்கலைத்துறை சிறப்பு விண்ணப்ப முகாம்

 தேவகோட்டையில் தோட்டகக்லைத்துறை சிறப்பு விண்ணப்ப முகாம் மே 29 ஆம் தேதி முதல் ஜூன் 2 வரை நடைபெற உள்ளது.

 தேவகோட்டையில் தோட்டகக்லைத்துறை சிறப்பு விண்ணப்ப முகாம் மே 29 ஆம் தேதி முதல் ஜூன் 2 வரை நடைபெற உள்ளது.
  இது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அழகு மலை வெளியிட்ட செய்தி:
  தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் வீரிய ஒட்டுரக காய்கறி மற்றும் மிளகாய் சாகுபடி, மா அடர் நடவு,  மா பழைய தோட்டம் புதுப்பித்தல், பண்ணை குட்டை அமைத்தல், நிழல் வலை கூடாரம் அமைத்தல், பறவை தடுப்பு வலை, நிலப்போர்வை அமைத்தல், ஒருங்கினைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், தேனீ வளர்ப்பு, பவர் டில்லர், கைத்தெளிப்பான்கள் மற்றும் விசைத்தெளிப்பான்கள், பன்ணை குறைபாடு நிவர்த்தி, சிப்பம் கட்டும் அறை  முதலிய திட்ட இனங்களுக்கு மானியம் வழங்கபடுகிறது. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாடி காய்கறி தோட்டம் அமைக்க 40 சதவீதம் மானியத்தில் தளைகள் வழங்கபடுகிறது.மேற்கண்ட திட்டங்களில் பயனைடய விரும்பும் விசாயிகள் தங்களது நில உடமை ஆவணங்களுடன்குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் 29.05.2017 முதல் 02.06.2017 வரை நடைபெறவுள்ள சிறப்பு விண்ணப்ப முகாம்  தேவகோட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
  எனவே தேவகோட்டை வட்டார தோட்டக்கலை அலுவலரை அணுகி முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து திட்ட பயன்களை அடையுமாறு  தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com