திருப்பத்தூர் முகாமில் மாற்றுத்திறனாளிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  புதன்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  புதன்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவ பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்குதல், 40 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு உள்ளவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்குதல், வங்கிக் கடன் உதவி பெற்றுத்தருதல் உள்ளிட்ட அரசு உதவிகள் வழங்கும் பணிகள் பெற்றன. இந்த முகாமிற்கு வருவதற்காக பல கிராமங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து  ஆட்டோக்களிலும், சுமார் 2 கி.மீ. தூரம் சிரமப்பட்டு நடந்தும் வந்தனர்.
  மேலும் அங்கு நுழைவு வாயிலில் போடப்பட்டிருந்த சுருள் கம்பி பாதையை கடந்து செல்ல மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டனர்.  போதிய இடவசதி இல்லாததால் அவர்கள் கழிப்பறை அருகே தரையில் கைக்குழந்தைகளுடன் சிலர் அமர்ந்திருந்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் பரிசோதனை செய்யும் இடத்திற்கு அழைத்துச்செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கை கொண்ட வண்டி இல்லாததால் அவர்களை உறவினர்கள் தூக்கிச்சென்றனர். முகாமிற்கு தேவையான ஆவணங்களை கொண்டுவர முறையான முன்னறிவிப்பு செய்யப்படாததால் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் அவதிப்பட்டனர்
    இதுகுறித்து திருப்புத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கூறுகையில், எனக்கு உடலில் 30 சதவீதம் குறைபாடு உள்ளது. ஆனால் இங்கு 40 சதவீதம் குறைபாடு இருந்தால்தான் மாற்றுத்திறனாகளுக்கான அடையாள அட்டை வழங்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் நான் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தால் என்னை மாற்றுத்திறனாளி என்று கூறி ஓட்டுநர் உரிமம் கொடுக்க போக்குவரத்து வட்டார அலுவலர் மறுக்கிறார். என்னைப் போன்று 30 சதவீதம் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெற முடியாமல் உள்ளனர் என்று கூறினார்.
    இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் சிலர் கூறுகையில், இந்த முகாமிற்கு நாங்கள் கிராமங்களில் இருந்து வருகின்றோம். பேருந்துநிலையம் அருகில் முகாமை நடத்தியிருந்தால் சிரமம் இல்லாமல் இருந்திருக்கும். மேலும் 40 ஊராட்சிகளுக்கும் ஒரே இடத்தில் முகாம் நடத்தியதால் பயனாளிகள் கூட்டத்தில் சிக்கித் தவித்தனர். சிலர் குழந்தைகளுடன் நடந்தே வந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான போதிய வசதி செய்யப்படாதது வருத்தமளிக்கிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com