திருப்பத்தூரில் துப்புரவு பணியாளர்கள் பணி புறக்கணிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சிதுப்புரவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சிதுப்புரவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் பேரூராட்சியில் 39 நிரந்தர துப்புரவுப்பணியாளர்களும் 60தினக்கூலிபணியாளர்களும் உள்ளனர். இதில் புதிதாக வேலையில் அமர்த்தப்பட்ட 7 துப்புரவு பணியாளர்கள் துப்புரவுப் பணி மேற்கொள்ளாமல்,அலுவலகப்பணிகளில் ஈடுபட்டுள்ளனராம். இதனைக் கண்டித்து சக துப்புரவு பணியாளர்கள் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சிகளின் இணை இயக்குநரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து செயல் அலுவலரிடம் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை இல்லாததால் வெள்ளிக்கிழமை 29 நிரந்த துப்புரவு பணியாளர்கள் காலையில் பணியினை புறக்கணித்து அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து துப்புரவு பணியாளர்களுக்கு சம உரிமை அளிக்கக் கோரியும் அரசு விடுமுறை தினங்களில் முழு நாள்கள் விடுமுறை மறுக்கப்படுவதாகவும் முறையான கையுறை மற்றும் ஷூ வழங்கப்படவில்லை என்றும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாலை வரை அதிகாரிகள்பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் சனிக்கிழமையும் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று கூறினர். இப்போராட்டத்திற்கு துப்புரவு தொழில் செய்வோர் மற்றும் ஆதிதிராவிட நலச்சங்க மாவட்டத் தலைவர் மலைச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் மதுரைவீரன் துணைச் செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து செயல் அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில்,இப்போராட்டம் குறித்து பேரூராட்சி இணை இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com