சிவகங்கை குழந்தைகள் அறிவியல் மாநாடு: அரசுப் பள்ளி ஆய்வுக்கட்டுரைக்கு முதல் பரிசு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரூகே கருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரூகே கருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது.
  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்சிவகங்கையில்ஞாயிற்றுக்கிழமை25 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் திருப்பத்தூர் ஒன்றியம் கரூப்பூர் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சமர்ப்பித்த நீர்வள மேலாண்மை பாரம்பரிய அறிவு என்ற தலைப்பில் தேற்றான் கொட்டையைப் பயன்படுத்தி நீரை சுத்தமாக்குவதுகுறித்து ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தனர். இந்த கட்டுரை முதல் பரிசு பெற்றது. ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த மாணவர்கள் சரண்ராஜ், மனோஜ், உதயகுமார், பிரியதர்ஷி.னி, அபிநயா ஆகியோர் டிசம்பர் மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
   இதனை முன்னிட்டு திங்கள்கிழமை பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜான்சார்லஸ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ரோஸி வரவேற்றார். 
 ஆய்வு கட்டுரைக்கு வழிகாட்டி ஆசிரியராகத் திகழ்ந்த ஸ்டீபன் வாழ்த்துரை வழங்கினார். ஆய்வில் ஈடுபட்ட மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com