பிறந்தநாள் விழா: கீழச்சிவல்பட்டியில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் 100 ஆவது பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சியினரால் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் 100 ஆவது பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சியினரால் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு கீழச்சிவல்பட்டியில் உள்ள இந்திரா நகரில் அமைந்திருக்கும் இந்திரா காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து காங்கிரசார் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் தீவிரவாத ஓழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 
விழாவிற்கு மாவட்டப் பொருளாளர் எஸ்.எம். பழனியப்பன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் அழகுமணிகண்டன் அனைவரையும் வரவேற்றார். வட்டார காங்கிரஸ் தலைவர் பன்னீர்செல்வம், மாவட்டத் துணைத் தலைவர் வழக்குரைஞர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் இ.எம்.எஸ். அபிமன்யு  உள்ளிட்டோர் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் மகாலிங்கம், விஸ்வநாதன், முன்னாள் வட்டாரத் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் மாலை அணிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திராகாந்தியின் 100 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகள் பங்கு பெறும் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி நடத்துவது என்றும் ஒவ்வொரு கிராமத்திலும் 100 மரக்கன்றுகள் நடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com