வி.ஏ.ஓ தேர்வு: அழகப்பா பல்கலை.,  தன்னார்வப் பயிலும் வட்டத்தில் இலவசப் பயிற்சி

தமிழ்நாடு தேர்வாணையம் வரும் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி -11 இல் நடத்தவிருக்கும் குரூப்-4, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு

தமிழ்நாடு தேர்வாணையம் வரும் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி -11 இல் நடத்தவிருக்கும் குரூப்-4, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் தன்னார்வப் பயிலும் வட்டத்தின் மூலமாக இந்தப் பயிற்சி வகுப்புகள் வரும் நவம்பர் 25-ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லெ.சித. லெ. பழனியப்பச்செட்டியார் நினைவரங்கத்தின் தரைத்தளத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் பழனியப்பச்செட்டியார் நினைவரங்கத்தில் இயங்கும் தன்னார்வப் பயிலும் வட்டத்திற்கு நேரில் சென்றோ அல்லது 04565-223266 என்ற தொலைபேசி எண்ணி லோ, 8675974989 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வி. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com