திருப்பத்தூர் மத்திய கூட்டுறவு வங்கியில் ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், எஸ்.புதூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு ஒழிப்புப் பணிகள் குறித்தும், தொடக்க வேளாண் கூட்டுறவு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், எஸ்.புதூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு ஒழிப்புப் பணிகள் குறித்தும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் நடைபெற்று வரும் பயிர்க்காப்பீடு குறித்தும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க. லதா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு குறித்த விழிப்புணர்வும், டெங்கு ஒழிப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க. லதா செவ்வாய்க்கிழமை எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம் புழுதிப்பட்டியில் உள்ள கால்நடை மருந்தகம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, செட்டிக்குறிச்சி, கருங்குறிச்சிப்பட்டி, பொன்னடப்பட்டி ஆகிய கிராமங்களிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் எஸ்.புதூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி, திருப்பத்தூர் மத்திய கூட்டுறவு வங்கி, எஸ். புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கண்டவராயன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருக்கோஷ்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நடைபெற்று வரும் பயிர்க்காப்பீடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் திலீப்குமார், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் செல்வம், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்)யசோதாமணி, வட்டார மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com