மாவட்டத்தைத் தூய்மையாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்

தூய்மை மாவட்டமாக மாற்ற  பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா  கேட்டுக் கொண்டுள்ளார்.

தூய்மை மாவட்டமாக மாற்ற  பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா  கேட்டுக் கொண்டுள்ளார்.
    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள சொர்ணகாளீஸ்வரர் கோவில் முன்பு பாரத சேவை ரதத்தின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில்,மாவட்ட ஆட்சியர் க.லதா பாரத சேவை ரதத்தை தொடங்கி வைத்து பேசியது: தூய்மையே சேவை எனும் திட்டத்தின் கீழ் அக்டோபர் 2 வரை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகள் நடைபெற உள்ளன. அரசு அலுவலர்கள்,இளைஞர்கள், தன்னார்வலர்கள்,பாதுகாப்பு பணியாளர்கள், பெண்கள்,விளையாட்டு வீரர்கள், தூய்மை பாரத இயக்கத்தினைச் சார்ந்த தூதுவர்கள், தனியார் நிறுவன அலுவலர்கள் பங்கேற்று தூய்மைப் பணிகளை  மேற்கொள்ளவர்.   
மாவட்டத்தில் உள்ள பள்ளி,கல்லூரி வளாகங்கள்,மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள்,பேருந்து நிலையங்கள்,வழிபாட்டு தலங்கள்,வீடுகள் ஆகிய பகுதிகளிலும்,அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளும் போது,பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவு குப்பைகளை(மக்கும் குப்பை-மக்கா குப்பை)சேகரித்து தூய்மைக் காவலர்களிடம் வழங்கி,மாவட்டம் தூய்மை பெற முழுமனதோடு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
   இதில்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, தூய்மை பாரத சேவை திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பல்த்தசார், மாவட்ட உறுப்பினர் நடாலியா ஜோசப், காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  அன்புத்துரை, ரஜினிதேவி, வட்டாட்சியர் சந்தானலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள், தூய்மைக் காவலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com