திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத விழா

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் 1 ஆவது சனிக்கிழமையையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் 1 ஆவது சனிக்கிழமையையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
உற்சவ மூர்த்தி பெருமாள் வெள்ளி கவச ராஜ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம் சார்பாக, உலக நன்மை வேண்டி 1008 சகஸ்ரநாம அர்ச்சனைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர்கள், மதுராந்தக நாச்சியார் தலைமையில், மேலாளர் இளங்கோ, தேவஸ்தானக் கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஆகியோர் செய்திருந்தனர். திருக்கோஷ்டியூர் காவல் சார்பு-ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com