காரைக்குடி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் விருது வழங்கும் விழா

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியின் 4-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா அழகப்பா பல்கலைக்கழக

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியின் 4-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா அழகப்பா பல்கலைக்கழக எல்.சிடி.எல். பழனியப்பச்செட்டியார் நினைவுக் கலையரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில், சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஜெ. ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்துப் பேசினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் சொ.சுப்பையா, காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் கேஆர். ராமசாமி, தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து, காரைக்குடி நகராட்சி ஆணையர் ஏ.சுந்தரம்பாள், புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
விழாவில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் கே. மகேந்திரன், அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் கே. திராவிடச்செல்வம், சிவகங்கை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜி. பரமதயாளன், செக்காலை சகாயமாதா ஆலய பங்குதந்தை வின்சென்ட் அமல்ராஜ், தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் ஆர். சந்திரமோகன், ரோட்டரி சங்கத் தலைவர் நாச்சியப்பன், தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி. திராவிட மணி, முன்னாள் ஊராட்சித்தலைவர் எஸ். மாங்குடி, தொழில் நிறுவன உரிமையாளர்கள் ஆரோக்கியநாதன், பெவின் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில் 2016-2017 ஆம் கல்வியாண்டில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ- மாணவிகளுக்கும் பள்ளியின் 100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களும் விருதுகள் வழங்கப்பட்டன. அதைத்தொ டர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா வரவேற்றார். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர். பட்டதாரி ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com