பொங்கல் விழா: கும்மியடித்து கொண்டாடிய ஆட்சியர்

சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா மற்றும் தூய்மையை வலியுறுத்தும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கோலப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா மற்றும் தூய்மையை வலியுறுத்தும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கோலப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
    சிவகங்கை மானாமதுரை சாலையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.லதா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் வேளாண்மை துறை,செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை, ஊரக  வளர்ச்சித் துறை உள்ளிட்ட 18 அரசுத் துறைகள் சார்பில் தனித்தனியே பொங்கல் வைக்கப்பட்டன. கும்மியடித்தல் நிகழ்வில் பெண்களுடன் ஆட்சியரும் கலந்துகொண்டார்.
   அதே வளாகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கோலப் போட்டியில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 86 குழுக்கள் கலந்து கொண்டன. கலந்து கொண்ட குழுவினர் அனைவரும் தனிநபர் இல்ல கழிப்பறை திட்டம், தூய்மை இந்தியா திட்டம், பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு குறித்த திட்டம் ஆகியவற்றை வர்ணமிட்டு கோலமிட்டிருந்தனர். 
  பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கோலப் போட்டியில் முதலிடம் பெற்ற பருத்திக் கண்மாய் மல்லிகை குழுவிற்கு 4 கிராம் தங்கமும்,இரண்டாமிடம் பெற்ற சிவகங்கை பெரியார் நகர் மலர்கள் குழுவிற்கு 2 கிராம் தங்கமும், மூன்றாமிடம் பெற்ற கல்லல் பெரியம்மை காசி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 1 கிராம் தங்கமும் வழங்கப்பட்டன.  
  இவை தவிர, லக்கி கார்னஸ், மியூசிக் சேர், கயிறு இழுக்கும் போட்டிகள் தனித் தனியாக நடைபெற்றது.
 போட்டிகளில் பெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com