மருத்துவ அறிக்கை தாமதத்தால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் தீக்காயத்துடன் நோயாளி அவதி

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதி வழங்கி அறிக்கை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதி வழங்கி அறிக்கை தருவதில் தாமதப்படுத்தியதால் தீக்காயமடைந்த நோயாளி மிகவும் அவதிக்குள்ளானர்.
    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள  ஒழுகமங்களத்தைச் சேர்ந்த சின்னையா மகன் ராம்குமார் (21). இவர் கடந்த சில நாள்களுக்கு முன் தனக்கு ஏற்பட்ட மன வருத்தத்தினால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால், பலத்த தீக்காயமடைந்த  நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
   அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு தீக்காயத்தின் அளவு 70 சதவீதத்திற்கு கூடுதலாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, வியாழக்கிழமை மாலை அதற்குரிய மருத்துவ அறிக்கை தயார் செய்யாமல் ராம்குமாரை ஸ்ட்ரெச்சர் மூலம் மருத்துவமனையை விட்டு ஊழியர்கள் வெளியே அனுப்பி வைத்தனராம். 
   சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நோயாளி மற்றும் அவரது உறவினர்கள் வெளியில் காத்திருந்த நிலையில், ஆம்புலன்ஸ் வந்த பின்பும் மருத்துவ அறிக்கை வராததால் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் நோயாளி மிகவும் அவதியடைந்தார்.அதன்பின்னர் உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில்  அலுவலர்கள் மருத்துவ அறிக்கையை வழங்கினர்.
  சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் அங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை முறையை சரிவர கவனிப்பதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com