சிவகங்கை அருகே இருதரப்பினர் மோதல்: 4 பெண்கள் உள்பட 11 பேர் கைது

சிவகங்கை அருகே  இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகளை சூறையாடிய 4 பெண்கள் உள்பட 11 பேரை சிவகங்கை தாலுகா போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

சிவகங்கை அருகே  இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகளை சூறையாடிய 4 பெண்கள் உள்பட 11 பேரை சிவகங்கை தாலுகா போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
  தமறாக்கி தெற்கு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதே கிராமத்தைச் சேர்ந்த வேறொரு சமூகத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தராம். அவர்கள் இருவரையும் கடந்த சில தினங்களுக்கு முன் காணவில்லையாம். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து, தேடி வந்துள்ளனர். பல நாள்களாகியும் இருவர் குறித்தும் எந்த தகவலும் இல்லாததால், ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் அந்த இளைஞரின் வீடு அமைந்திருக்கும் மற்றொரு தரப்பினரின் பகுதிக்குள் வியாழக்கிழமை புகுந்து வீடுகளை தாக்கி சேதப்படுத்தினர். இதில்,ஏராளமான பொருள்கள் சேதமடைந்தன.
   இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா போலீஸார் தமறாக்கியைச் சேர்ந்த முருகானந்தம் (37),சிங்கராசு (60), தங்கராஜ் (38), பஞ்சமுத்து (56), சேதுமுத்து (50), முனீஸ்வரன் (40), லிங்கம் (45), பழனியம்மாள் (50), பார்வதி (55), பஞ்சவர்ணம் (40), சுந்தரி (66) ஆகிய 11 பேர் மீது வழக்குப் பதிந்து அவர்கள் அனைவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
  இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
அமைச்சர் நிவாரண உதவி: 
தமறாக்கி தெற்கு கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில்  சேதமடைந்த வீடு ஒன்றுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் 18 வீடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான காசோலையை தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரன் நேரடியாக வெள்ளிக்கிழமை வழங்கினார். அப்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் உடனிருந்தார்.  
இந்நிகழ்ச்சியில்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல் உள்பட அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com