காரைக்குடியில் கூட்டுறவு பல்பொருள் அங்காடி சில்லறை விற்பனை நிலையம் திறப்பு

சிவகங்கை மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலையின் சிறு பல்பொருள் விற்பனை அங்காடியை காரைக்குடியில் தமிழக கதர் மற்றும்


சிவகங்கை மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலையின் சிறு பல்பொருள் விற்பனை அங்காடியை காரைக்குடியில் தமிழக கதர் மற்றும் கிராமத்தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியது: அடித்தட்டு மக்களின் தேவைகளை நேரில் சென்று உடனுக்குடன் வழங்கும் துறை கூட்டுறவுத்துறைதான்.விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறையே முக்கியப்பங்காற்றுகிறது.
தொடர்ந்து மக்களுக்கு குறைந்த விலையில் பொருள்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாம்கோ மூலம் பல்பொருள் அங்காடி தொடங்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் மூன்று அங்காடி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களிலிருந்து அனைத்துப் பொருள்களும் மற்ற வணிக நிறுவனங்களைவிட குறைந்தவிலையில் கிடைக்கும் என்றார்.
அதனைத்தொடர்ந்து என்.ஜி.ஓ. காலனி, பர்மா காலனி பகுதியிலும் சிறு பல்பொருள் அங்காடி விற்பனை மையங்களை அமைச்சர் திறந்து வைத்தார். விழாவிற்கு சிவகங்கை மக்களவை உறுப்பினர் பிஆர். செந்தில்நாதன் முன்னிலை வகித்தார்.
கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், காரைக்குடி ஆவின் தலைவர் கே.ஆர். அசோகன், மேலாண்மை இயக்குநர் திருவள்ளுவர், காரைக்குடி சரக துணைப்பதிவாளர் முத்து, பாம்கோ நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், பொதுமேலாளர் சண்முகவேல், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் பா.காளிதாஸ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com