தேனி அருகே ஏப்.22-இல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளியில், மாவட்ட வேலை வாய்ப்பு
தேனி அருகே ஏப்.22-இல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளியில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் ஏப்ரல் 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

 இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற் பயிற்சி படிப்பு, பொறியியல் படிப்பு  வரை தேர்ச்சி பெற்ற ஆண் மற்றும் பெண்கள், தங்களது சுய விபரக் குறிப்பு மற்றும் உரிய சான்றிதழ்களின்  நகல்களுடன் கலந்து கொள்ளலாம். 

 தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபில் ஆகியோர் பணி நியமன உத்தரவுகளை வழங்குகின்றனர் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com