பச்சேரி கிராம சாலை சீரமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே  உள்ள பச்சேரி கிராமத்தையும் திருச்சுழியையும் இணைக்கும் சாலை கற்கள் பெயர்ந்து மிக மோசமான நிலையில் உள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே  உள்ள பச்சேரி கிராமத்தையும் திருச்சுழியையும் இணைக்கும் சாலை கற்கள் பெயர்ந்து மிக மோசமான நிலையில் உள்ளது.
 பச்சேரி கிராமம் திருச்சுழியை ஒட்டி சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 800 பேருக்கு மேல் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களில் பெரும்பான்மையினர் அருகிலுள்ள பஞ்சு நூற்பாலைக்கு கூலி வேலைக்குச் செல்பவர்களாகவும்,கட்டடத் தொழிலாளர்களாகவும் உள்ளனர். இக்கிராமத்தினை திருச்சுழியுடன் இணைக்கும்  சாலை  சென்ற மாத  மழையில் கற்கள் பெயர்ந்து தற்போது குண்டும்குழியுமாக போக்குவரத்திற்குப் பயனற்ற வகையில் மிகவும் மோசமாக உள்ளது. இக்கிராமத்திற்கு பேருந்துகள் வராததால்அவசர சிகிச்சைக்கோ, பிரசவத்திற்கோ என எப்போதும் வாடகைஆட்டோ பிடித்துச் செல்லும் நிலையே உள்ளது.ஆனால் தற்போதைய இச்சாலையில் ஆட்டோக்கள் செல்லும்போது அதில் பயணிக்கும் கர்ப்பிணிகளோ,நோயாளிகளோ மிகவும் அவதிக்கு ஆளாகின்றனர். சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்களோ தடுமாறி விழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே இச்சாலையை சீர் செய்ய இக்கிராமம் உள்ளடங்கிய தமிழ்ப்பாடி  ஊராட்சியில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையென பொதுமக்கள் வருந்துகின்றனர். ஆகவே விரைவில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com