சாத்தூர் அருகே சாலையை சீரமைக்க கோரிக்கை

சாத்தூர் அருகே கத்தாளம்பட்டியிலிருந்து-குமெரட்டியாபுரம் செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர். 

சாத்தூர் அருகே கத்தாளம்பட்டியிலிருந்து-குமெரட்டியாபுரம் செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர். 
       விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அம்மாபட்டி ஊராட்சிக்குள்பட்டது குமரெட்டியாபுரம். இந்த கிராத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். 
இந்த கிராமத்துக்கு, சாத்தூரிலிருந்து சிலோன் காலனி, கத்தாளம்பட்டி வழியாகத்தான் செல்ல முடியும். ஆனால், கத்தாளம்பட்டியிலிருந்து-குமரெட்டியாபுரத்துக்கு செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், மழைக் காலத்தில் இச்சாலையில் தண்ணீர் தேங்குவதால், அடிக்கடி விபத்து நிகழ்கிறது. சாலை மேலும் மோசமாகிறது.
     குமரெட்டியாபுரம் கிராமத்துக்கு அரசுப் பேருந்து இல்லாத நிலையில், சிற்றுந்து மற்றும் ஆட்டோக்கள் மட்டுமே இப்பகுதி 
மக்களுக்கு ஆதரவாக உள்ளன. 
இந்நிலையில், இந்த சாலையில் சென்று வரும் வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதால், வாகன ஓட்டிகள் வந்து செல்ல அச்சப்படுகின்றனர். இதனால், தினமும் 2 கிலோ மீட்டர் சுற்றி அம்மாபட்டி வழியாகச் செல்ல வேண்டிய நிலை உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 
     இச்சாலையை சீரமைக்க கிராமத்தினர்,  ஊராட்சி நிர்வாகத்துக்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. 
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இச்சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com