அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்: 2 பேர் கைது

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை, போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநர்கள் இருவரையும் கைது செய்தனர். 

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை, போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநர்கள் இருவரையும் கைது செய்தனர். 
       மதுரை-தூத்துக்குடி நான்குவழிச் சாலையில்,  பந்தல்குடி பகுதியில் திங்கள்கிழமை நெடுஞ்சாலை ரோந்து பணியில் காவல் சார்பு-ஆய்வாளர் லூர்து சேவியர் ராஜ் மற்றும் போலீஸார் ஈடுபட்டிருந்தனர் அப்போது, அவ்வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அவ்விரு லாரிகளிலும் அனுமதியின்றி மணல் கடத்தப்பட்டு வருவது தெரியவந்தது.  
    உடனே, அவ்விரு லாரிகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில்,   லாரிகளின் ஓட்டுநர்களான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த விஜயன்(42) மற்றும் குளித்துறையைச் சேர்ந்த மகாலிங்கம் (51) என்பது தெரியவந்தது. 
    இதையடுத்து, பந்தல்குடி போலீஸார் லாரி ஓட்டுநர்களை கைது செய்து, லாரிகளின் உரிமையாளர்களான திக்குறிச்சியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் ஜோஸ் பென்சியர் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com