ஆதிதிராவிட மக்களுக்கான பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: உ. வாசுகி

விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவி உ. வாசுகி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவி உ. வாசுகி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஆதிதிராவிடர் வாழும் குடியிருப்பு பகுதிகள் குடிநீர், பெண்கள் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, விருதுநகரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கோரிக்கை பேரணி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 50 கிராமங்களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் பல்வேறு கோரிக்கை கள் உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள், நிதி ஒதுக்கீடு ஏழை நடுத்தர சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவவில்லை. தொட்டியபட்டியில் தண்ணீர் பிரச்னை காரணமாக  அருந்ததியர் மக்களின் வீடுகள் நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில், தலித் மக்கள் குடியிருக்க பட்டா கிடைப்பதில்லை, இறந்த பின்பு சுடுகாடு கிடையாது. அப்படியே சுடுகாடு இருந்தாலும், கொண்டு செல்ல பாதை கிடையாது என்ற நிலைதான் பல இடங்களில் உள்ளது.
எனவே, விருதுநகர் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை, தீண்டாமையை தடுப்பதற்ககாக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை ஆகியவை, இதுவரை தாங்கள் செய்த நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மோடி அரசு, பல பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்கிறது. பொதுத் துறை நிறுவனங்கள், தனியாரிடம் விற்கப்பட்டால், இட ஒதுக்கீடு இல்லாமல் போகும் என்றார். முன்னதாக தேசபந்து மைதானத்திலிருந்து தொடங்கிய பேரணி பஜார், நகராட்சி சாலை வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சி.முருகேசன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com