சாத்தூரில் பாதாள சாக்கடை பணிகள் நிறுத்தம்

ஒப்பந்தகாரர்களுக்கு பணம் கொடுக்காததால் சாத்தூரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஒப்பந்தகாரர்களுக்கு பணம் கொடுக்காததால் சாத்தூரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
சாத்தூர் நகராட்சி பகுதியில் ரூ. 38 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இவை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வெள்ளைக்கரை சாலை, நென்மேனி சாலை, நகராட்சி குடியிருப்பு ஆகிய இடங்களில் கழிவுநீர் உந்தும் நிலையம் அமைக்கவும், இருக்கன்குடி சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கபட்ட கழிவுநீரை விவசாயத்திற்கு வழங்கவும் திட்டமிடப்பட்டது. பாதாள சாக்கடை பணிகளில் சுத்திகரிப்பு நிலையம், மூன்று கழிவுநீர் உந்து நிலையம், சுத்திகரிப்பு நிலைய சுற்றுச்சுவர் உள்ளிட்ட பணிகளை சென்னையைச் சேர்ந்த நிறுவனம் டெண்டர் எடுத்தது. இந்நிலையில் இருக்கன்குடி சாலையில் உள்ள சுத்திகரிப்பு நிலைய சுற்றுசுவர் அமைக்கும் பணி, கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்படவில்லையாம். இதனால் பணிகள் கடந்த இரண்டு வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில இடங்களில் பணிகள் மெதுவாக நடைபெறுகிறது. குறிப்பிட்ட காலத்தில் முடிக்கும் விதத்தில், முறையாக பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் எனத்  தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com