சாலையோரக் கிணறுகளால் விபத்து அபாயம்

கோவிலாங்குளத்திலிருந்து கட்டங்குடி செல்லும் வழியில் உள்ள சாலையோர கிணறுகளால் விபத்து அபாயம் உள்ளது.

கோவிலாங்குளத்திலிருந்து கட்டங்குடி செல்லும் வழியில் உள்ள சாலையோர கிணறுகளால் விபத்து அபாயம் உள்ளது.
கோவிலாங்குளம் மற்றும் கட்டங்குடி ஆகிய கிராமங்களைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிணற்றுப் பாசனம் மூலம் மல்லிகை, பருத்தி, வெண்டைக்காய், மக்காச்சோளம், கம்பு, உளுந்து, கொத்தமல்லி, மிளகாய் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில் சில கிணறுகள் இக்கிராமங்களை இணைக்கும் சாலையோரங்களில் அமைந்துள்ளன. கோவிலாங்குளம்-கட்டங்குடி சாலையை ஒட்டி 2 கிணறுகள் பாழடைந்த நிலையில் உள்ளன. இக்கிணறுகளை மறைத்து தடுப்புச்சுவரும் அமைக்கப்படவில்லை. இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
பள்ளி, கல்லூரிப் பேருந்துகள், விளைபொருள்களைக் கொண்டு செல்லும் டிராக்டர், சரக்கு வாகனங்கள் போக்குவரத்து இந்தச் சாலையில் அதிகம். எனவே விபத்து ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com