மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர் 100 சதவீதம் தேர்ச்சி

விருதுநகர் மாவட்டத்தில், குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு எஸ்எஸ்எல்சி தேர்வெழுதிய 35 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், 9 பேர் 400 க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  

விருதுநகர் மாவட்டத்தில், குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு எஸ்எஸ்எல்சி தேர்வெழுதிய 35 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், 9 பேர் 400 க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  
 விருதுநகர் மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் மூலம் 9 வயது முதல் 14 வயதுக்கு உள்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள், தீப்பெட்டி, பட்டாசுத் தொழில், செங்கல் சூளையில் பணிபுரிந்தவர்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்படுகிறது. பின்னர், இவர்கள் ஆறாம் வகுப்பு முதல் முறைசார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகளில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்.
இதில், தேர்வு எழுதிய 35 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் விவரம்: சிவகாசி காரனேசன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எஸ்.காயத்ரி- 452, சுகன்யா- 400, திருத்தங்கல் எஸ்.என்.ஜி மேல்நிலைப்பள்ளி ஜி.செல்வலட்சுமி- 447, திருத்தங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி ஜி.மாரீஸ்வரி- 443, வி.பாண்டீஸ்வரி- 427, படந்தால் அரசு மேல்நிலைப் பள்ளி எஸ்.சரண்யா- 431, திருத்தங்கல் கலைமகள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஏ.அஸ்வின்- 419, சாத்தூர் ஏ.வி மேல்நிலைப் பள்ளி சுபாஷ்- 405, ரிசர்வ்லைன் அரசு மேல்நிலைப் பள்ளி காளீஸ்வரி- 409. இவர்கள் தவிர 300 மதிப்பெண்களுக்கு மேல் 17 மாணவ, மாணவிகளும், அதற்கு கீழ் 9 மாணவ, மாணவிகளும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com