அங்கீகாரம் பெறாத வீட்டடி மனைகளை ஒழுங்குபடுத்த விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

அங்கீகரிக்கப்படாத வீட்டடி மனைமனைப் பிரிவுகளை ஒழுங்குபடுத்த சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்தார்

அங்கீகரிக்கப்படாத வீட்டடி மனைமனைப் பிரிவுகளை ஒழுங்குபடுத்த சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அங்கீகரிக்கப்படாத வீட்டடி மனைகள் மற்றும் மனைப்பிரிவு ஒழுங்குபடுத்துதல் தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:
தமிழக அரசு அங்கீகாரம் பெறாத வீட்டடி மனைகள் மற்றும் மனைப் பிரிவுகளை வரைமுறைப்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது.இதன்படி 20.10.2016 தேதிக்கு முன்புவரை அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளாக இருப்பின் அவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளித்து அங்கீகாரம் பெற்று கொள்ளலாம்.
விருப்பமுள்ள மனை உரிமையாளர்  அல்லது ஊக்குவிப்பாளர்கள்  உரிய ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். பொது அங்கீகாரம்  பெற்ற நபர்களின் ஆவணங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது.
பொது நீர்வழி இடங்கள் மற்றும் புறம்போக்கு இடங்களில் அமைந்துள்ள வீட்டடி மனைகள், மனைப்பிரிவுக்கு தகுதியற்றவையாகும். பொது ஒதுக்கீடு இடத்தில் (பூங்கா விளையாட்டு மைதானம் போன்றவற்றிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவை) அமைந்துள்ள வீட்டடி மனைகள், மனைப் பிரிவுக்கு பரீசீலிக்கப்பட மாட்டாது.
மேலும், புதிய சாலை (அல்லது) ரயில் நடைபாதை மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சாலை சீரமைப்பு ஆகியனவற்றில் அமைந்துள்ள வீட்டடி மனைகள், மனைப்பிரிவுக்கு தகுதியற்றவையாகும்.
விண்ணப்பத்துடன் மூன்று வரைபட நகல்கள், அங்கீகரிக்கப்படவுள்ள மனைப்பிரிவு வரைபடம், டோபோ ஸ்கெட்ச் நகல், தாமே மேலொப்பமிட்ட )விற்பனை ஆவணம், பட்டா, நிரந்தர நில ஆவணம் நகர அளவு, வில்லங்கச் சான்று, விவசாய நிலமாக இருந்தால் அது குறித்த வட்டாட்சியர் சான்று முதலானவற்றை இணைக்க வேண்டும்.
இனி வருங்காலங்களில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு (அல்லது) வீட்டடி மனைகளை விற்கவோ (அல்லது) வாங்கவோ இயலாத நிலை உள்ளது. எனவே, அரசின் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொண்டு பொது மக்கள் பயன் பெறலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com