வத்திராயிருப்பு குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி ஆர்ப்பாட்டம்

வத்திராயிருப்பில் ஒன்றிய அளவிலான குடிநீர் பிரச்னையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வத்திராயிருப்பில் ஒன்றிய அளவிலான குடிநீர் பிரச்னையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.பாண்டிச் செல்வி தலைமை வகித்தார். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும் கட்சியின் மாவட்டச் செயலாளருமான தி.ராமசாமி, கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் வி.அழகிரிசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றினர்.
பழுதடைந்த சின்டெக்ஸ் தொட்டிகளையும், அடி பம்புகளையும் பழுது நீக்கி தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும். தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை உடனே சீர் செய்ய வேண்டும். மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுக்கும் இணைப்புகளைத் துண்டிப்பு செய்து மின் மோட்டார்களை அகற்ற வேண்டும். அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை வரன்முறை செய்து தர வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நீர் ஆதாரம் உள்ள இடங்களைச் சரியாக தேர்வு செய்து ஆழத்தை அதிகப்படுத்தி ஆழ்துழைக் கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்டப் பொருளாளர் என்.முருகேசன், ஒன்றியச் செயலாளர் ஆர்.சரவணன், நகரச் செயலாளர் என்.கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com