குழந்தைகள் தின விழா: ஆட்சியர் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல்

தேசிய குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, விருதுநகர் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் கவிதை, கட்டுரை,

தேசிய குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, விருதுநகர் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை செவ்வாய்கிழமை  வழங்கினார்.
விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் மூலம், தேசிய குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
மாணவர்கள் கனவு காணவேண்டும் என்றும், கண்ட நல்ல கனவினை நனவாக்க கடினமான முயற்சி மேற்கொள்ளவேண்டும். வருங்காலத்தில் நல்ல சமுதாயம் அமைவது மாணவர்களாகிய உங்கள் கையில்தான் உள்ளது. மேலும், மாணவர்கள் எந்தவொரு போட்டியிலும் கலந்துகொள்ள வேண்டும்.
   பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமையும். இது போன்ற பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் தனக்குத் தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் தனக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த முடியும் என்றார்.
    முன்னதாக, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் சேதுநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஆர். ரமாதேவி, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதினால் ஏற்படும் நன்மைகள் பற்றி பெற்றோரிடம், உறவினர்களிடம் எடுத்துரைத்து, அவர்களை சம்மதிக்க வைத்து, தனது வீட்டில் தனிநபர்
இல்லக் கழிப்பறை கட்ட வைத்துள்ளார்.
மேலும், தனது கிராமத்தில் பலருக்கும் கழிப்பறை கட்ட வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களையும் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டவும் உதவியுள்ளார்.
இதையறிந்த ஆட்சியர், மாணவி. ஆர். ரமாதேவிக்கு மாவட்ட ஊரகப் பகுதிகளில் சுகாதாரத்துக்கான முதல் தூதுவராக நியமித்து, நினைவுப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.  அதேபோல், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை மற்றம் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற 29 மாணவர்களுக்கு, ஆட்சியர் பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) காதர் மீர், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com