டெங்கு ஒழிப்புப் பணியில் பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்: ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர்

சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும், டெங்கு ஒழிப்புப் பணிக்கும், பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று, மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் எஸ். கலா தெரிவித்துள்ளா

சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும், டெங்கு ஒழிப்புப் பணிக்கும், பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று, மம்சாபுரம் அரசு ஆரம்ப
சுகாதார நிலைய தலைமை மருத்துவர் எஸ். கலா தெரிவித்துள்ளார்.
      மம்சாபுரம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று, பொதுமக்களிடையே அவர் கூறியதாவது:
     மாணவர்களுக்கு தொடக்க நிலையில் இருந்து பாடங்களில் தன் சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் குறித்த கருத்துகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. மாணவர்கள் இது குறித்து கிராமப்புறங்களில் உள்ள தங்களது பெற்றோருக்கு எடுத்துக் கூறி, முன்மாதிரியாக தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
     இதனைக் கண்டு பக்கத்தில் உள்ளவர்களும் தங்களது வீடு, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வர். இதனால், பல்வேறு நோய் தொற்றுகளைத் தடுக்கலாம்.
   அரசு எவ்வளவுதான் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பொதுமக்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் சுகாதாரப் பணியை முழுமையாக நிறைவு செய்ய இயலாது. சுகாதாரப் பணியாளர்கள் துப்புரவு செய்துவிட்டு சென்ற உடனே மீண்டும் மீண்டும் பல இடங்களில் தேவையற்ற குப்பைகளை குவித்து வைப்பது, திறந்தவெளியில் மலம் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால்தான், பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றன.
     அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் குப்பைகளை கொட்ட வேண்டும். அரசு கட்டி வைத்துள்ள சுகாதார வளாகங்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். தங்களது வீட்டு கழிவு நீரை, வீட்டில் தோட்டம் அமைத்து அதற்கு பாய்ச்சலாம் என்றார் அவர்.
பின்னர், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சித்த மருத்துவர் ஆரோக்கியராஜ், மம்சாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com