டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை: அரசு ஊழியர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க கோரிக்கை

டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையை அரசு ஊழியர்களின் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழக அரசு இணைக்க வேண்டுமென, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையை அரசு ஊழியர்களின் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழக அரசு இணைக்க வேண்டுமென, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
     இது குறித்து அச்சங்கத்தின் விருதுநகர் மாவட்டச் செயலர் ச.இ. கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆனால், டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை. எனவே, இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.  தற்போது, டெங்கு காய்ச்சல் சிகிச்சை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் இதற்கான சிகிக்சை இணைக்கப்படவில்லை. இதனால், அவர்கள், அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
    எனவே, டெங்கு காய்ச்சலை அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com