சிவகாசி சிவன் கோயில் மாடவீதியில் குப்பை கொட்டுவதை தடுக்க கோரிக்கை

சிவகாசி சிவன் கோயிலின் மாடவீதியில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி சிவன் கோயிலின் மாடவீதியில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி சிவன்கோயிலின் முன்புறம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.மேலும் பழ வியாபாரிகள் வியாபாரத்திற்காக தங்களது தள்ளு வண்டிகளை அப்பகுதியில் நிறுத்துவதால் போக்கு வரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோயிலை சுற்றி மாடவீதிகளில் மூன்று இடங்களில்  குப்பை கொட்டப்படுகிறது. இந்த குப்பையை நகராட்சி ஊழியர்கள் இருநாள்களுக்கு ஒருமுறை அள்ளுகிறார்கள். எனினும்  குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு பரவி வருகிறது. 
கோயிலின் காலணி வைக்கும் பகுதி மற்றும் பாதசாரிகள் நடக்கும் பகுதியில், குப்பை கொட்டப்படுகிறது. இந்த குப்பையை கோழி, நாய் உள்ளிட்டவை கிளறுவதால், நடந்து கூட செல்ல இயலாத நிலை உள்ளது. கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள மாடவீதியில், சுவர் அருகே இரு இடங்களில் குப்பை கொட்டப்படுகிறது.
இப்பகுதியில் உள்ள பழவியாபாரிகள் காகிதம், பாலிதீன்பை உள்ளிட்ட  கழிவுகளை கொட்டுகிறார்கள். எனவே சிவன் கோயில் மாடவீதியில் மூன்று இடங்களில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து முன்னாள் பா.ஜ.க. நகர் மன்ற உறுப்பினர் ஜி.ஆறுமுகச்சாமி கூறியதாவது: கோயில் வளாகம் சுத்தமாக இருக்க பக்தர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கடைக்காரர்களுக்கு ஒவ்வொரு கடையிலும் குப்பை கொட்டுவதற்கு பிளாஸ்டிக் தொட்டி வைத்து அதில் குப்பை கொட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் அந்த குப்பைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு நகராட்சி ஏற்பாடு செய்து, கோயிலருகே குப்பை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com