சிவகாசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு

சிவகாசி வீட்டுவசதி வாரியகுடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி வீட்டுவசதி வாரியகுடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இதில் சுமார் 400 வீடுகள் உள்ளன.இப்பகுதி தேவர்குளம் ஊராட்சி பகுதியாகும். 
  இக் குடியிருப்பு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு  கட்டிய கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதியில் உள்ள மொத்த கழிவு நீரும், குடியிருப்பு நுழைவு வாயில் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலின் பின் பகுதியில் தேங்குகிறது. சுமார் அரை கீ.மீ. தூரம் கழிவு நீர் தேங்கியுள்ளது. கழிவு நீர் தேங்கியுள்ள பகுதி சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலைப் பகுதியாகும். 
  இதன் அருகே காவல்துறையினர் சோதனை சாவடி உள்ளது. இதில் பகல் மற்றும் இரவில் பணிபுரியும் காவலர்கள், பொதுமக்கள் கொசுக்கடியினால் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் தூர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடும் பரவி வருகிறது. இது குறித்து குடியிருப்பில் வசித்து வரும் சுப்பிரமணியன் கூறியதாவது:
    கழிவு நீரை முறைப்படி அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளேம். ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றுக்கும் கடிதம் எழுதியும் இதுவரை எந்தத் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கழிவு நீர்வாய்காலை அடைத்து பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியிலிருந்து கழிவு நீர் வெளியேற இயலாமல் தேங்கியுள்ளது.
வீட்டுவசதி  வாரிய குடியிருப்பு மற்றும் இதன் சுற்றுப்புற பகுதிகளை இணைத்து, கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com