பேருந்து கட்டண உயர்வு: விருதுநகரில் கண்டன பொதுக்கூட்டம்

விருதுநகரில் திமுக தலைமையிலான அனைத்து கட்சியினர் சார்பில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து செவ்வாய்க்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

விருதுநகரில் திமுக தலைமையிலான அனைத்து கட்சியினர் சார்பில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து செவ்வாய்க்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. 
    இக்கூட்டத்திற்கு திமுக விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும் சட்டப்பேரவை உறுப்பினருமான எ.வ. வேலு கலந்து கொண்டு பேசினார்.
     தமிழக அரசு எந்த வித முன்னறிவிப்புமின்றி பேருந்து கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் பொதுமக்கள் மீது சுமையை ஏற்றி விட்டனர். அரசு போக்குவரத்து கழகங்களில் நஷ்டம் ஏற்பட்டால், அதை அரசு தான் சரி செய்ய வேண்டும்.அரசு போக்குவரத்து கழகம் மக்கள் சேவைக்காக தொடங்கப்பட்டது. இதில், நஷ்டக் கணக்கு காட்டி பொதுமக்களை வாட்டி வதைப்பது கண்டனத்திற்குரியது என்றார்.
   இந்த நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ராஜா சொக்கர், மதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அர்சுணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை பொதுச் செயலாளர் முகமது கவுஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆற்றலரசு, சட்ட பேரவை உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன்(விருதுநகர்), தங்கபாண்டியன் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com