கல்லூரியில் தொழிற்சாலை மேலாண்மைப் பயிற்சி

அருப்புக்கோட்டை ஸ்ரீசெளடாம்பிகா பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பாக தொழிற்சாலை மேலாண்மைப் பயிற்சி வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை ஸ்ரீசெளடாம்பிகா பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பாக தொழிற்சாலை மேலாண்மைப் பயிற்சி வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.
இப்பயிற்சிக்குத் தலைமை வகித்த கல்லூரி முதல்வர் சிவக்குமார் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து தொழிற்சாலை மேலாண்மை பற்றியும் அதன் அவசியம் பற்றியும் சிறப்புரையாற்றினார். மதுரை டெக்னோசென் அகாதெமியின் தொழிற்சாலை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ஜாகிர் ஹூசேன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
இயந்திரவியல்துறை மாணவர்கள் தொழிற்சாலைகளின் செயல்பாட்டிற்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொள்வதுடன், அதன் அனுபவ ரீதியான நுட்பங்களை உணர்ந்து கொண்டு செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் ஒவ்வொரு மாணவரும் தமது தனித்திறனை வளர்த்துக்கொண்டு புதிய தொழில்நுட்பங்களையும் முயற்சித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.மாணவ,மாணவிகளுக்கு
அவர் இரண்டு நாள்கள் பயிற்சி அளித்தார். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் துறைத்தலைவர் ஜகுபார் சாதிக் மற்றும் ஒருங்கிணைப்பாளர் குருநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com