ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த நாள்:அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 ஆவது பிறந்த நாள் விழா அக்கட்சியினரால் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 ஆவது பிறந்த நாள் விழா அக்கட்சியினரால் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சாத்தூர்: சாத்தூரில் அதிமுக சார்பில் பெருமாள்கோயில், விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் முக்குராந்தல் பகுதியில் ஜெயலலிதா உருவப் படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். மேலும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ரொட்டி, பழம், பிஸ்கட் வழங்கினர். சாத்தூர் நகாராட்சி அரசு மேல்நிலைபள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
இதில் அதிமுக நகரச் செயலாளர் வாசன் டெய்சிராணி, மாநில பொதுகுழு உறுப்பினர் வேலாயுதம், ஒன்றியச் செயலாளர் சண்முகக்கனி, வழக்குரைஞர் சேதுராமானுஜம், ஈஸ்வரன்உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதே போன்று டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் நந்தவன பிள்ளையார் கோயிலில் சிறப்பு புஜை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். பின்னர் முக்குராந்தல் பகுதியில் வைக்கபட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. மதியம் பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. மாலையில் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
சிவகாசி: சிவகாசி நகர அதிமுக சார்பில், நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அக்கட்சியின் நகர செயலாளர் அசன்பத்ரூதின், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் இங்குள்ள விஸ்வநாதர்-விசாலாட்சியம்மன் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. திருத்தங்கல் நகர அதிமுக சார்பில் , கடைவீதியில் உள்ள அண்ணாதுரை உருவச்சிலைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அக்கட்சியின் நகர செயலாளர் பொன்சக்திவேல் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார்.பின்னர் அங்குள்ள நின்றநாராயணப்பெருமாள் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. சிவகாசி ஒன்றிய அதிமுக சார்பில், நாரணாபுரம், பள்ளபட்டி, சாட்சியாபுரம் உள்ளிட்ட 23 இடங்களில் அமைக்கப்ப்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் கருப்பசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மருத்துவ முகாம்: சிவகாசி விஜயா மருத்துவமனை சார்பில் முதலமைச்சரின் விரிவாக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை அதிமுக நகர செயலாளர் அசன்பத்ரூதின் தொடக்கிவைத்தார். மருத்துவர்கள் ராஜோஸ்குமார் தர்கர், விக்னேஷ்வரன் ஆகியோர் தலைமையிலான குழு 54 நபர்களுக்கு , இரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, இ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகளை செய்தது. இதில் தேவைப்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்து மற்றும் மாத்திரை வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா, முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் த.முத்தையா ஆகியோர் தலைமையில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேருந்து நிலையத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். எம்எல்ஏ தனது சொந்த செலவில் ரூ.12 லட்சம் மதிப்பில் ஏழைகள், ஆதரவற்றோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு ரொட்டி, பழம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. சொக்கலாம்பட்டியில் உள்ள மன வளர்ச்சி குன்றியோர் பள்ளிக் குழந்தைகளுக்கும், குட்டதட்டி வள்ளலார் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற மாணவ, மாணவியருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்கோயில் மற்றும் மேலகோடாங்கிபட்டி கிராமத்தில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் வத்திராயிருப்பு மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைகளில் ஜெயலலிதா பிறந்த நாளன்று பிறந்த 9 குழந்தைகளுக்கு எம்எல்ஏ தங்க மோதிரம் அணிவித்தார். பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஊனமுற்றோர் 27 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள், ஆதரவற்ற ஏழைப் பெண்கள் 63 பேருக்கு தையல் இயந்திரம், ஆதவற்ற பெண்கள் 2 ஆயிரம் பேருக்கு சேலைகள் மற்றும் ஆண்களுக்கு வேஷ்டிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கட்சியின் மாநில மகளிர் அணி பொறுப்பாளர் சக்திகோதண்டம், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், கூட்டுறவு நகர வங்கித் தலைவர் எஸ்.எம். பாலசுப்பிரமணியம், நகர் பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன், வத்திராயிருப்பு ஒன்றியச் செயலாளர் சுப்புராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.மயில்சாமி, மம்சாபுரம் பேரூராட்சி செயலாளர் வழக்குரைஞர் அய்யனார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் நகரின் 33 வார்டுகள், வத்திராயிருப்பு மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மரியாதை செய்யப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com