அந்தியோதயா சிறப்பு ரயிலை தினசரி இயக்கக் கோரிக்கை

தாம்பரம்-செங்கோட்டை இடையேயான அந்தியோதயா சிறப்பு ரயில் சேவையை தினசரி இயக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். 

தாம்பரம்-செங்கோட்டை இடையேயான அந்தியோதயா சிறப்பு ரயில் சேவையை தினசரி இயக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். 
இந்த ரயில் மார்ச் 5,7,12,14 இல் தாம்பரத்தில் காலை 7 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் வழியாக இரவு 10 மணிக்கு செங்கோட்டைக்கு சென்றடையும் வகையிலும், மீண்டும் மார்ச் 6, 8, 13, 15 ஆம் தேதிகளில் செங்கோட்டையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு ராஜபாளையம்,சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, கும்பகோணம் வழியாக தாம்பரத்திற்கு இரவு 10 மணிக்கு வந்தடையும் வகையிலும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
முன்பதிவில்லா ரயிலாக இயங்கும் இது, மார்ச் 15 ஆம் தேதிக்கு பின், தாம்பரம்-செங்கோட்டைக்கு அந்தியோதாயா ரயிலாக தினமும் இயக்கப்படும் எனக் கூறப்பட்டது.
நீண்ட தூரங்களுக்கு முன்பதிவு வசதியில்லாத இந்த அந்தியோதயா ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் பெட்டியில் பயோ- டாய்லெட், குடிநீர் வசதி, செல்போனை சார்ஜ் செய்யும் வசதி, தீயணைக்கும் கருவிகள் என பல வசதிகள் உள்ளது. இந்த ரயிலை தினசரி இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com