ஸ்ரீவிலி. நகராட்சியில் சொத்து வரி நிலுவைத் தொகை ரத்து

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உயர்த்தப்பட்ட சொத்து வரியின் ஆறரையாண்டு நிலுவைத் தொகை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உயர்த்தப்பட்ட சொத்து வரியின் ஆறரையாண்டு நிலுவைத் தொகை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 
    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் உள்ள வீடுகளில் குறிப்பிட்ட 4 ஆயிரம் வீடுகளை, வெளியூர் நகராட்சி அலுவலர்கள் வந்து ஆய்வு செய்து நீளம், அகலத்துக்குத் தகுந்தாற்போல் சொத்து வரியை ஆறரை ஆண்டுகளுக்கு முன்பிருந்து நிர்ணயம் செய்தனர். இந்த வரி உயர்வு பல நூறு மடங்கு உயர்வாக இருந்தது.
    இந்த ஆறரை ஆண்டுகளுக்கு நிலுவைத் தொகையை இந்த மாதத்துக்குள் செலுத்தவும், நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. ஒவ்வொரு வீட்டுக்கும் நிலுவைத் தொகை பல ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருந்ததால், பொதுமக்கள் கலக்கமடைந்தனர்.    இது குறித்து நகர் வளர்ச்சி இயக்கம் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து, தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மு. சந்திரபிரபாவை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, சந்திரபிரபா சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரை கடந்த வாரம் நேரில் சந்தித்து முறையிட்டார். தற்போது, நகராட்சி நிர்வாக ஆணையர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் வசூலிக்க திட்டமிட்டிருந்த ஆறரையாண்டு நிலுவைத் தொகையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். 
    எனவே,  நகர் வளர்ச்சி இயக்கம் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபாவை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com