சுற்றுலா மையமாகுமா மூணாறு தலைப்பு?

நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு இயற்கை அழகு எழில் கொஞ்சும் இடமாகும். இங்கு நூறு வருடங்களைக் கடந்து நிற்கும் தேக்கு மரங்கள் பார்ப்பவர்களை அதிசயிக்க வைக்கிறது.
சுற்றுலா மையமாகுமா மூணாறு தலைப்பு?

நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு இயற்கை அழகு எழில் கொஞ்சும் இடமாகும். இங்கு நூறு வருடங்களைக் கடந்து நிற்கும் தேக்கு மரங்கள் பார்ப்பவர்களை அதிசயிக்க வைக்கிறது.

மூணாறு தலைப்பை கோரையாறு தலைப்பு என்றும் அழைப்பர். மேட்டூர் நீரானது திறந்துவிடப்படும்போது கல்லணைக்கு அந்த நீர் வந்த பின்பு கல்லணையும் திறக்கப்பட்டு டெல்டா மாவட்டப் பாசனத்திற்காக நீர் பெரியவெண்ணாற்றில் விடப்படுகிறது. பெரியவெண்ணாற்று நீர் மூணாறு தலைப்பை வந்தடைந்ததும் வெண்ணாறு , கோரையாறு, பாமணியாறு என மூன்று ஆறுகளில் நீர் பிரித்து பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது.

மூணாறு தலைப்பு வளாகத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான அலுவலகம் ஒன்றும் இயங்கிவருகிறது. இந்த வளாகப் பகுதியில் நூறு வயதைக் கடந்தும் நிமிர்ந்து நிற்கும் தேக்கு மரங்கள் உள்ளன.

  இங்கு பொதுப்பணித்துறை பொறியாளர்களாகப் பணியாற்றியவர்கள் தேக்கு உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டுவைத்ததால் மூணாறு தலைப்பிற்கு அது அழகு சேர்க்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு காலத்தில் நீடாமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பள்ளி மாணவ, மாணவிகளை இந்த மூணாறு தலைப்பிற்குத்தான் சுற்றுலாவிற்கு  பள்ளி ஆசிரியர்கள் அழைத்துச் செல்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.   மூணாறு தலைப்பு பகுதியைச் சுற்றுலாத்துறை மூலம் மேலும் நவீனப்படுத்த  வேண்டும். சுற்றுலா பயணிகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதெல்லாம் தொடர்ந்து பல வருடங்களாக கோரிக்கை வைத்தும் அது நிலுவையில் உள்ளது.

  மூணாறு தலைப்பில் ஆய்வு மாளிகை ஒன்று சிதிலமடைந்துள்ளது. இந்த ஆய்வு மாளிகையில் ஒரு காலத்தில் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் வந்து தங்கியதும் உண்டு. 

இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த ஆய்வு மாளிகையை இடித்துவிட்டு புதிய ஆய்வு மாளிகையைக் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.  மூணாறு தலைப்பு அருகில் தான் இருவழிச்சாலைக்கான பாலம் கட்டப்பட்டு நெடுஞ்சாலையும் அமைக்கப்படவுள்ளதால் சுற்றுலா தலமாக அறிவித்து மேலும் நவீனப்படுத்தினால் அரசுக்கும் இப்பகுதி கிராம மக்களுக்கும் பெரும் பயனுள்ளதாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com