இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

மன்னார்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ததைக் கண்டித்து நெடும்பலம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

மன்னார்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ததைக் கண்டித்து நெடும்பலம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை சாலை மறியல் நடத்தினர்.
மன்னார்குடியில் கடந்த 20-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மனு கொடுக்க வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே சென்றனர். அப்போது விவசாயிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அரசுப் பணிகளை செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் அருள்ராஜன் உள்ளிட்ட 100 பேர் மீது மன்னார்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் கடைத்தெருவில் கட்சியின் கிளைச் செயலாளர் அம்பிகாபதி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com