குடவாசல் பகுதியில் தீவிரமாகும் பருத்தி சாகுபடி

குடவாசல் பகுதியில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது.

குடவாசல் பகுதியில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது.
நடப்பாண்டில் வறட்சியால் குறுவை, சம்பா மற்றும் தாளடி சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், குடவாசல் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோடை பயிரான பருத்தியை நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்துவருகின்றனர்.
குடவாசல் வட்டம் அன்னவாசல், சேங்காளிபுரம், பெரும்பண்ணையூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஆர்வம்காட்டி வருகின்றனர். தற்போது பருத்திக்கு பாத்திக்கட்டும் பணி இயந்திரத்தைக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து, அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி கூறியது:
நிலத்தடி நீர் நெற்பயிர் சாகுபடிக்கு போதுமானதாக இல்லாதநிலையில், கிடைக்கின்ற தண்ணீரைக் கொண்டு கோடைப் பயிரான பருத்தி சாகுபடியை குறைந்த அளவில் செய்து வருகிறோம். விவசாயத் தொழிலாளர்கள் மாற்று வேலைக்கு சென்றுவிட்டதால், இயந்திரத்தின் உதவியுடன் பாத்திக்கட்டும் பணி, களை எடுக்கும் பணியை செய்து வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com