கொடிநாள் விழா: ரூ. 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்

திருவாரூரில் நடைபெற்ற கொடிநாள் விழாவில் ரூ.2,18, 748 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வியாழக்கிழமை வழங்கினார்.

திருவாரூரில் நடைபெற்ற கொடிநாள் விழாவில் ரூ.2,18, 748 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வியாழக்கிழமை வழங்கினார்.
 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கொடிநாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்துப் பேசியது: முப்படைகளிலும் பணியாற்றி நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் நினைவாக டிச.7 இல் படைவீரர் கொடிநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது, கொடி நாள் வசூல் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. பின்னர், அனைத்து துறை அலுவலர்களின் உதவியோடு இந்த இலக்கு எட்டப்படுகிறது.
 திருவாரூர் மாவட்டத்தில் 2015-2016 ஆண்டில் ரூ.37,37,793 வசூல் செய்யப்பட்டு, மாநில அளவில் முதலிடம் பெற்றதால், ஆளுநரால் பாராட்டப்பட்டு கேடயம் வழங்கப்பட்டது. அதன்படி 2016-2017 ஆண்டில் ரூ. 52,15,000 வசூல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
 இதைத்தொடர்ந்து சுயதொழில், வங்கிக்கடன், வட்டி மானியம், தொகுப்பு நிதி,  கல்வி உதவித்தொகை, ஈமச்சடங்கு நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ரூ.2 ,18, 748 மதிப்பில் முன்னாள் படைவீரர் மற்றும் முன்னாள் படைவீரர் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டன.
 முன்னதாக, கொடிநாள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி நிதி வழங்கி, கொடிநாள் வசூலை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
 நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தியாகராஜன், வருவாய்க் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com