வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குடவாசல், கொரடாச்சேரி பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்து  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வியாழக்கிழமை  ஆய்வு செய்தார்.

குடவாசல், கொரடாச்சேரி பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்து  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வியாழக்கிழமை  ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு இயக்கம் 2018-இன்படி   வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்து விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்கள் அடிப்படையில் விண்ணப்பதாரரின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
குடவாசல்  வட்டம், சேங்காலிபுரம் கிராமத்துக்குள்பட்ட வடக்குத்தெரு, கொரடாச்சேரி பேரூராட்சிக்குள்பட்ட சிவன் கோவில் தெரு, மங்களாபுரம்,  ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்து விண்ணப்பத்துள்ள விண்ணப்பங்கள் அடிப்படையில் விண்ணப்பதாரரின் விவரங்களை நேரில் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறியது:
18 வயது நிறைவடைந்து இதுநாள் வரை உள்ளவர்களும், அதாவது 31.12.1999 வரை பிறந்தவர்களும் தங்களது பெயரை  வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம் 6-ஐ பெற்று அதை பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயதுக்கான ஆதாரம், இருப்பிடத்துக்கான ஆதாரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளரது பெயரை நீக்கம் செய்வதற்கு படிவம் 7-லும் திருத்தம் செய்வதற்கு படிவம் 8-ம், ஒரே சட்டப்பேரவை  தொகுதிக்குள் இடமாற்றம் செய்வதற்கு படிவம் 8யு-விலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் 15.12.2017 வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியல்களை w‌w‌w.‌n‌v‌s‌p.‌i‌n என்ற வலை தளத்திலும் காணலாம். இணையதள முகவரியிலும் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என்றார்
ஆட்சியர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com