சித்தா, ஹோமியோபதி, யுனானி பிரிவுகள் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம்

பழைய அரசு மருத்துவமனையில் இயங்கிவந்த சித்தா, ஹோமியோபதி, யுனானி புறநோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவுகள் வியாழக்கிழமை முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

பழைய அரசு மருத்துவமனையில் இயங்கிவந்த சித்தா, ஹோமியோபதி, யுனானி புறநோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவுகள் வியாழக்கிழமை முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சித்தா பிரிவை தொடங்கிவைத்து பேசியது: கடந்த 30 ஆண்டுகளாக சித்த மருத்துவப் பிரிவும், 20 ஆண்டுகளாக ஹோமியோ, சித்தா மருத்துவப் பிரிவுகளும் பழைய அரசு மருத்துவமனைக் கட்டடத்தில் இயங்கிவந்தன. இதனால், நோயாளிகள் அலோபதி சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரிக்கும் மாற்று சிகிச்சைக்காக திருவாரூர் நகருக்குள்ளும் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
மேலும், வளர்ந்து வரும் இந்த மூன்று துறைகளுக்கும் பழைய இடம் போதுமானதாக இல்லை. ஒரே இடத்தில் அலோபதி, மாற்று மருத்துவமுறை இயங்குவதால் அது மருத்துவர் களிடையே ஒரு புரிதலையும், ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கான வழிகளையும் ஏற்படுத்தும் என்பதால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளி நோயாளிகள் பிரிவிலேயே இத்துறைகளும் செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, வியாழக்கிழமை வெளி நோயாளிகள் பிரிவு முதல் தளத்தில் சித்தா, ஹோமியோபதி, யுனானி பிரிவுகள் செயல்பட தொடங்கியுள்ளன என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஏ.சி. காந்த், துணைக் கண்காணிப்பாளர் சுந்தர், குழந்தைகள் நலத்துறை தலைமை மருத்துவர் கண்ணன், சித்த மருத்துவ அலுவலர் ஹேமா, ஹோமியோபதி மருத்துவ அலுவலர் தாரிணி, யுனானி மருத்துவ அலுவலர் தாரிக்அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com