விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

பயறு வகைப் பயிர்களில் உயர் விளைச்சல் பெறுவதற்கான சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து கோட்டூர் அருகே உள்ள வல்லூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு திங்கள்கிழமை சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டது.

பயறு வகைப் பயிர்களில் உயர் விளைச்சல் பெறுவதற்கான சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து கோட்டூர் அருகே உள்ள வல்லூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு திங்கள்கிழமை சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டது.
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், ஒருங்கிணைந்த வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில் கோட்டூர் வட்டார வேளாண்மை அலுவலர்  ஆர்.இந்திரஜித் வேளாண்மைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார்.
உதவிப் பேராசிரியர்கள் அ.காமராஜ், ராஜா.ரமேஷ் பேசினர்.  ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் தாக்குதலைத் தடுக்கும் பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்தும், முட்டை ஒட்டுண்ணி, ஒட்டும் அட்டைப்பொறி, இனக்கவர்ச்சி பொறி போன்றவற்றை பயன்படுத்தும் முறை குறித்தும் செயல்விளக்கமளிக்கப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக பயறு அதிசயம் மருந்து வழங்கப்பட்டது. வேளாண்மை உதவி அலுவலர்கள் அழகேசன், செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com