குளங்களை தூர்வார அனுமதியளிக்க வலியுறுத்தல்

கோட்டூர் ஒன்றிய ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில், குளங்களை தூர்வார கிராம

கோட்டூர் ஒன்றிய ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில், குளங்களை தூர்வார கிராம மக்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
மன்னார்குடி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கோட்டூர் ஒன்றியம் திருமக்கோட்டை, மேலநத்தம், வல்லூர், இராதாநரசிம்மபுரம், குறிச்சி ஆகிய 5 ஊராட்சிகளில் பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அடுத்தடுத்து நடைபெற்ற இக்கூட்டங்களுக்கு கட்சியின் ஒன்றியத் தலைவர் எஸ்.எஸ். மோகன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கிராம பகுதிகளில் உள்ள குளங்களை அந்தந்த கிராம மக்களே தூர்வார மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். நீர் ஆதாரங்களை பெருக்க பண்ணை குட்டைகள் அமைக்க முன்வரவேண்டும். ஊரக வளர்ச்சி திட்டம் மூலம் வாய்க்கால்களை பராமரிக்க வேண்டும். குளக் கரைகளில் பனை மரங்கள் நட்டு பராமரிக்க வேண்டும். குறைந்த நீரைக் கொண்டு சாகுபடி செய்யும் பயிர்கள் குறித்து விவசாயிகளிடம் மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பாஜக மாவட்ட பொதுச் செயலர் வி.கே.செல்வம், தேசிய பொதுக் குழு உறுப்பினர் ஞானம்.ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர்.
ஒன்றிய பொதுச் செயலாளர் த. அப்புகுட்டி, கிளைத் தலைவர் வெங்கடேஷ் (குறிச்சி), சதீஷ் (வல்லூர்), மாரியப்பன்(இராதாநரசிம்மபுரம்), பாண்டியன் (திருமக்கோட்டை),சேகர்(மேலநத்தம்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com