அனுமதியில்லாத மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாத வீட்டு மனைகளை 6 மாத காலக் கெடுவுக்குள் வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்  இல. நிர்மல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாத வீட்டு மனைகளை 6 மாத காலக் கெடுவுக்குள் வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்  இல. நிர்மல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி இல்லாத வீட்டு மனைகளை சீர்படுத்தி வரன்முறைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் அவர் பேசியது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் அனுமதி பெறாமல் வீட்டுமனைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் பொது மக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை, பூங்கா போன்றவற்றை சரியாக அமைப்பதில்லை. அதன்மூலம் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே அனுமதி இல்லாத வீட்டு மனைகளை வைத்திருத்திருப்போர், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை அணுகி 6 மாத காலக்கெடுவுக்குள் அனுமதி இல்லாத வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் நிர்மல்ராஜ். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com